பாரிஸ்: உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை அனைத்துலகப் பெண்கள் டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி (6,605 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார்.
ஜப்பானின் நவோமி ஒசாகா (6,257 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (6,055 புள்ளிகள்) 3வது இடத்திலும், ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 4வது இடத்திலும், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் 5வது இடத்திலும், செக் குடியரசின் கிவிடோவா 6வது இடத்திலும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7வது இடத்திலும், அமெரிக்காவின் ஸ்லோவன் ஸ்டீபன்ஸ் 8வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் 9வது இடத்திலும், பெலாரஸின் சபலென்கா 10வது இடத்திலும் உள்ளனர்.

