மும்பை: இந்திய 'ஏ' அணியில் விளையாடி வரும் ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய 'ஏ' அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
இதில் நான்கு போட்டிகளில் விளையாடிய ஷுப்மான் கில் மூன்று அரைசதங்களுடன் 218 ஓட்டங்கள் குவித்துத் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அதிகபட்சமாக 77 ஓட்டங்கள் அடித்த அவரின் சராசரி 54.5 ஆகும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார். இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

