தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார் கோஹ்லி

தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார் கோஹ்லி

1 mins read
bf69e074-d1ba-448a-9f44-56bc0106c03e
பந்து வீச்சில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். படம்: ஏஎஃப்பி -

துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பந்து வீச்சில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணித் தலைவர் வில்லியம்சன் 913 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

புஜாரா (இந்தியா) 881 புள்ளியுடன் 3வது இடத்திலும், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) 857 புள்ளியுடன் 4வது இடத்திலும், நிக்கோலஸ் (நியூசிலாந்து) 5வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ் 878 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் (இங்கிலாந்து) 862 புள்ளியுடன் இரண்டாவது இடத்திலும், ரபடா (தென்னாப்பிரிக்கா) 851 புள்ளியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் ஜடேஜா 794 புள்ளியுடன் 6வது இடத்திலும், அஸ்வின் 763 புள்ளியுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்து உள்ளது. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) முதல் இடத்திலும், சகிப்-அல்-ஹசன் (பங்ளாதே‌ஷ்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் தர வரிசையில் இந்தியா 113 புள்ளியுடன் மீண்டும் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து (111 புள்ளி), 2வது இடத்திலும், தெனாப்பிரிக்கா (108 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பங்ளாதே‌ஷ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் நான்கு முதல் ஒன்பதாவது இடத்தில் உள்ளன.