பூப்பந்துப் போட்டி: முதல் சுற்றில் சிந்து வெற்றி

பூப்பந்துப் போட்டி: முதல் சுற்றில் சிந்து வெற்றி

1 mins read
36033635-0ee8-4c90-9965-e2691b2c802f
ஜப்பான் பொது விருது பூப்பந்துப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து. படம்: ஏஎஃப்பி -

தோக்கியோ: ஜப்பான் பொது விருது பூப்பந்துப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-9, 21-17 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூவைத் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 37 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியைச் சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சக நாட்டு வீரரான ஸ்ரீகாந்தை பிரானாய் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.