புதுடெல்லி: உலக வெற்றியாளர் மல்யுத்தப் போட்டி கஜகஸ்தானில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டுமானால் இந்திய வீரர்கள் தேர்வு போட்டியில் கலந்துகொண்டு திறமையை நிரூபிக்க வேண்டும். இதற்கான தேர்வு போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இரண்டு முறை ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற சுஷில் குமார் காயம் காரணமாக பங்கேற்க இயலாது என்றார். இதனால் 74 கிலோ பிரிவுத் தேர்வு போட்டியை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்தது இந்திய மல்யுத்த சம்மேளனம். படம்: டுவிட்டர்

