ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
12 அணிகளுக்கு இடையிலான ஏழாவது புரோ கபடி லீக் தொடரில் ஹைதராபாத்தில் நேற்றிரவு தெலுங்கு டைட்டன்ஸ் - தபங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இருதரப்பினரும் விட்டுக் கொடுக்காது தொடர்ந்து புள்ளிகளைக் குவித்தன.
இதனால் ஆட்டம் நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில், தபங் டெல்லி அணி 34-33 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் நவீன்குமார் 14 ரெய்டு புள்ளிகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மற்றோர் ஆட்டத்தில் மோதிய பெங்கால் வாரியர்ஸ் அணி 48-17 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோத்தாவை புரட்டி எடுத்தது. உ.பி. அணி எவ்வளவு முயன்றும் அதனால் பெங்கால் அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.

