பந்து பட்டு கிரிக்கெட் வீரரின் மண்டையோடு உடைந்தது

பந்து பட்டு கிரிக்கெட் வீரரின் மண்டையோடு உடைந்தது

1 mins read

லண்டன்: இங்கிலாந்து கவுன்டி அணிகளுள் ஒன்றான யார்க்‌ஷியர் அணிக்காக விளையாடி வருபவர் ஜோஷ் பாய்ஸ்டன், 27. சுழற்பந்து வீச்சாளரான அவர் கடந்த திங்கட்கிழமை சக யார்க்‌ஷியர் ஆட்டக்காரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்தடிப்பாளர் ஒருவர் அடித்த பந்து பாய்ஸ்டனின் தலையைப் பதம் பார்த்தது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று 'ஸ்கேன்' செய்து பார்த்ததில் அவரது மண்டையோடு உடைந்திருந்தது தெரியவந்தது. காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையும் பொருட்டு அவர் இந்தப் பருவத்தில் இனி விளையாடமாட்டார்.