தங்கம் வென்றார் மேரி கோம்

தங்கம் வென்றார் மேரி கோம்

1 mins read

ஜகார்த்தா: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை யான 36 வயது மேரி கோம் இந்தோனேசியா லபுயான் பஜோவில் நடைபெற்ற 23வது பிரசிடென்ட் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டார்.

51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏப்ரில் பிரான்ங்சை எதிர் கொண்டார். இதில் மேரி கோம் 5-0 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் வென்றார்.