டாக்கா: நியூசிலாந்து அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரியைப் (படம்)பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக அமர்த்தியது பங்ளாதேஷ்.
பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் குறுகிய கால சுழற்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக சுனில் ஜோஷி, வேகப்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக வால்ஷ் ஆகியோர் இருந்தனர்.
தற்போது அவர்களுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியின் வெட்டோரி, தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் சார்லஸ் லங்க்வெல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கிண்ண தொடரைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை பங்ளாதேஷ் எடுத்துள்ளது.

