ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார் மீது 26 வயது நஜிலா டிரின்டேட் என்ற மாடல் அழகி ஜூன் மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார்.
நெய்மாருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவரின் அழைப்பின் பேரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்தபோது, ஆக்ரோஷமாக நடந்துகொண்ட நெய்மார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் போலிசில் புகார் கொடுத்தார்.
அப்பெண்ணுடன் பழக்கம் இருந்தது உண்மை என்றாலும் தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நெய்மார் மறுத்தார். தன்னிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த மாதிரி நாடகம் ஆடுவதாகவும் நெய்மார் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக நெய்மார் போலிசில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, நெய்மாருக்கு எதிரான குற்றச்சாட்டிற்குப் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கைக் கைவிடுவதாக பிரேசில் போலிஸ் தெரிவித்துள்ளது.

