கவாஸ்கருக்கு பிரசாத் பதிலடி

கவாஸ்கருக்கு பிரசாத் பதிலடி

2 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் கோஹ்லி ஆதிக்கம் செலுத்துவதாக மறைமுகமாகச் சாடிய சுனில் கவாஸ்கர் தேர்வுக் குழுவை நொண்டி வாத்து என விமர்சித்தார்.

பிடிஐ நிறுவனத்துக்குப் பேட்டிஅளித்த தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கவாஸ்கரின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார்.

"தேர்வுக்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந் திய அணிக்காக வெவ்வேறு வடிவி லான கிரிக்கெட்டில் விளையாடி உள்ளோம். எங்களது பணி நிய மனத்தின்போது இவை அடிப்படை அளவுகோலாக இருந்தன.

"சர்வதேச கிரிக்கெட்டை தவிர நாங்கள் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) 477 முதல்தர ஆட்டங்களில் பங்கேற்றுள்ளோம்.

"மேலும் எங்களது பணிக் காலத்தில் 200 முதல் தர ஆட்டங்களை நேரில் பார்த்துள்ளோம்.

"எங்களது அந்தஸ்து, சர்வதேச கிரிக்கெட் அனுபவம் குறித்து சிலர் பேசுகின்றனர்.

"இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எட் ஸ்மித் ஒரே ஒரு டெஸ்டில்தான் விளையாடி உள்ளார்.

"சிறிது இடைவெளியுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவராகச் செயல்பட்டு வரும் டிரெவர் ஹான்ஸ், 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார்.

"மற்ற நாடுகளில் தகுதியும் அனைத்துலக கிரிக்கெட் அனுபவமும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத பட்சத்தில், நமது நாட்டில் மட்டும் எப்படி எடுத்துக்கொள்ளப்படும்.

"நொண்டி வாத்து' என்று என் மீது விமர்சனங்களை அள்ளித் தெளிப்பது துரதிருஷ்டவசமானது.

"உண்மையில், இந்த வகையான கருத்துகளால் காயப்படுவதைவிட, இது இந்தத் தேர்வுக் குழுவை

வலுவானதாகவும் உறுதியானதாகவும் ஒற்றுமையாகவும் ஆக்கு

கிறது.

"ரவி சாஸ்திரி, விராத் கோஹ்லி ஆகியோருடன் இணைந்து ஒற்றுமையாகப் பணியாற்றுகிறோம். இதில் அவர்கள் ஆதிக்கம் செலுத் துவதற்கு ஒன்றும் இல்லை.

"அணித் தலைவர், பயிற்றுவிப்பாளருக்கான பணிகளும் பொறுப்புகளும் உள்ளன. இதே போல் எங்களுக்கும் பணியும் பொறுப்பும் இருக்கின்றன.

"பல சந்தர்ப்பங்களில் எங்களுக் குள் கருத்து வேறுபாடுகள் இருந் தன. அவற்றைப் பொதுக்களத்தில் நாம் கொண்டு வரக்கூடாது.

"அதிக அளவிலான கிரிக்கெட் விளையாடுபவர்கள், அதிக அளவிலான அறிவைப் பெற்றிருப்பார்கள் அல்லது அதிக அளவிலான அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள், அதனால் யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று மக்கள் கருதுவது தவறான கருத்து.

"புதிய வீரர்கள் 35 பேரை உருவாக்கி அவர்களை இந்திய அணியில் 3 விதமான கிரிக்கெட் வடிவங்களில் விளையாட வைத் துள்ளோம்," என்றார் திரு பிரசாத்.