இனவெறி தூற்றலுக்கு ஆறு ஆட்டங்கள் தடை

இனவெறி தூற்றலுக்கு ஆறு ஆட்டங்கள் தடை

1 mins read

லண்டன்: பிற வீரர்களை இனத்தைக் கூறி பழிக்கும் குற்றத்தில் ஈடுபடும் காற்பந்து வீரர்களுக்குக் குறைந்தபட்சம் ஆறு ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்படும் என இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய விதிமுறை வரும் 10ஆம் தேதி தொடங்க இருக்கும் புதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்திலிருந்து நடப்பிற்கு வரும். முன்னர் இந்தத் தடை ஐந்து ஆட்டங்களாக இருந்தது.

இங்கிலிஷ் காற்பந்தின் கடந்த பருவத்தில் இனவெறி பழிப்பு நிகழ்வுகள் 43% அதிகரித்ததாக அதன் வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.