லிவர்பூல், செல்சி வெற்றி

ஜெனீவா: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் புதிய பருவம் தொடங்க இன்னும் எட்டு நாட்களே இருக்கும் நிலையில், முன்னணிக் குழுக்களான லிவர்பூலும் செல்சியும் இம்முறை பட்டம் வென்றே தீருவது என கங்கணம் கட்டியுள்ளன.

அதற்கேதுவாக, பருவத்திற்கு முந்திய ஆயத்தப் போட்டிகளிலும் இவ்விரு குழுக்களும் வெற்றிநடை போட்டு வருகின்றன.

பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவான லியோனுக்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த நட்புமுறை ஆட்டத்தில் லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரரான மெம்பிஸ் டிப்பாய் ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே கோலடித்து, லியோனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆனாலும், அதற்குப் பின் அக்குழு பிடியை நழுவவிட, லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

பிரேசில் ஆட்டக்காரர் ரொபெர்ட்டோ ஃபர்மினோ 17வது நிமிடத்தில் கோலடித்தார். லியோன் வீரர் ஜோக்கிம் ஆண்டர்சன் 21வது நிமிடத்தில் சொந்த கோல் அடிக்க, லிவர்பூல் முன்னிலைக்குச் சென்றது. அதன்பின், 22 வயதான வேல்ஸ் ஆட்டக்காரர் ஹேரி வில்சன் 53வது நிமிடத்தில் கிட்டத்தட்ட 25 மீட்டர் தொலைவில் இருந்து அற்புதமானதொரு கோலை அடிக்க, லிவர்பூலின் வெற்றி உறுதியானது.

ஜெர்மனியின் சல்ஸ்பர்க் நகரில் நடந்த இன்னொரு நட்புமுறை ஆட்டத்தில் ரெட்புல் சல்ஸ்பர்க் குழுவை செல்சி 5-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

செல்சி தரப்பில் கிறிஸ்டியன் புலிசிச் இரு கோல்களையும் ராஸ் பார்க்லி, பெட்ரோ, பட்ஷுவாயி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் போட்டனர். ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பின்னங்காலைக் கொண்டு பெட்ரோ அடித்த கோல், அவர் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் அருமையான கோலாக இருந்தது.

வெற்றிப் பாதைக்குத் திரும்பிய ரியால் மட்ரிட்

இதனிடையே, தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த முன்னணி ஸ்பானியக் குழுவான ரியால் மட்ரிட், ஒருவழியாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது நிர்வாகி ஸிடானுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்தது.

நட்சத்திர ஆட்டக்காரர் கரிம் பென்சிமா ‘ஹாட்ரிக்’ கோலடிக்க, ரியால் 5-3 என்ற கோல் கணக்கில் துருக்கியின் ஃபெனர்பாச் குழுவை வீழ்த்தியது. இருப்பினும், ஐந்து நட்புமுறை ஆட்டங்களில் ரியால் 16 கோல்களை விட்டுத் தந்திருப்பது கவலைக்குரிய அம்சம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!