மும்பை: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி, சக வீரர்களுடன் அண்மையில் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் நிலையில், அதில் பந்தடிப்பாளர் ரோகித் சர்மா இல்லாதது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
உலகக் கிண்ணத் தொடரின்போது கோஹ்லிக்கும் அணியின் துணைத் தலைவர் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனையடுத்து அவர்கள் சரியாக பேசிக்கொள்வதுகூட இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் அது வெறும் வதந்தி என்று இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியும் கோஹ்லியும் தெரிவித்திருந்தனர்.
"ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நீடிக்கிறது," என கோஹ்லி கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இன்று முதல் 'டி20' போட்டி நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இத்தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
அங்கு சக வீரர்களுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்
படத்தை கோஹ்லி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ரசிகர்கள் பலரும் அதுகுறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

