தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் மட்டையில் டோனி கையெழுத்திடும் புகைப்படம்

1 mins read
86f84dce-6bef-4436-8087-2de5d2cc41b8
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளர் டோனி கடும் விமர்சனத்திற்கு ஆளானார். போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்திய அணி வெளியேறியதை அடுத்து, தாம் ராணுவத்தில் சேரவிருப்பதாக டோனி அறிவித்து இருந்தார். -

ஸ்ரீநகர்: ராணுவச் சீருடையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி, கிரிக்கெட் மட்டை ஒன்றில் கையெழுத்திடும் புகைப் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்றுள்ள டோனி, ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். காஷ்மீரில் இயங்கும் ராணுவப் படையில் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் சேர்ந்தார்.

இந்நிலையில், ராணுவச் சீருடையில் கிரிக்கெட் மட்டையில் டோனி கையெழுத்திடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தெற்கு காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் டோனி பணியாற்றி வருகிறார். இம்மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் வரை இவர் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.