இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்களிலிருந்து விலகியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்ரே ரஸல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இடது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கிண்ணப் போட்டியின் பல ஆட்டங்களில் ரஸல் பங்கேற்கவில்லை.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குளோபல் டி20 கனடா போட்டியில் அவர் தற்போது விளையாடி வருகிறார்.
இந்நிலையில் முழு உடற்தகுதி இல்லாததால் தன்னால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரு 20 ஓவர் ஆட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அறிவித்துள்ளார்.
எனினும் அவருடைய இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக எட்மாண்டன் ராயல்ஸ் அணிக்கு எதிரான குளோபல் டி20 கனடா ஆட்டத்தில் ரஸல் பங்கேற்றதால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் பிராத்வெய்ட், ரஸலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

