தாய்லாந்து பேட்மிண்டன்: வெளியேறினார் சாய்னா

பேங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் அனைத்துலக பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சயாகா டகாஹஷியை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சாய்னா நேவால், இரண்டாவது செட்டை 11-21 என இழந்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 14-21 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

மொத்தம் 48 நிமிடங்கள் நீடித்த போட்டியில் சாய்னா நேவால் 21-16, 11-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-11, 16-21, 12-21 என தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 9-21, 14-21 என சீன தைபேயின் சோ டியன் சென்னிடம் தோல்வியடைந்தார்.

ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சத்விக் ரங்கி ரெட்டி-சிராக்ஷெட்டி இணை முன்னேறியுள்ளது.

இவர்கள் 22-20, 22-24, 21-9 என்ற கணக்கில் கொரியாவின் கோ சுங் ஹியுன்-ஷின் சியோல் இணையை 63 நிமிடங்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

சீனாவின் லி ஜின் ஹுய்-லியு சென் இணையை இறுதிச் சுற்றில் எதிர்கொள்கிறது இந்திய இணை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!