எஃப்1: ஹேமில்டன் முதலிடம்

எஃப்1: ஹேமில்டன் முதலிடம்

1 mins read
8de80461-06e0-4700-adb0-a0a7746ea78f
-

எஃப்1 கார்பந்தயத்தின் ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லூவிஸ் ஹேமில்டன் முதலிடம் பெற்றுள்ளார். 12ஆவது சுற்றான ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று நேற்று நடந்தது.

இதில் மெர்சிடிஸ் வீரரான லூயிஸ் ஹேமில்டன், பந்தய தூரத்தை 1.35.03.796 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். நடப்பு தொடரில் ஹேமில்டனின் எட்டாவது வெற்றி இதுவாகும். அவரை விட 17.796 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தைக் கடந்த ரெட்புல் வீரரான வெர்ஸ்டபன், இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

61.433 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தைக் கடந்த ஃபெர்ராரி அணியின் செபஸ்டியன் வெட்டல், மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 சுற்றுகள் முடிவில், இங்கிலாந்தின் ஹேமில்டன் 250 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து, வால்டேரி போட்டாஸ் 188 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.