லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
பந்தைச் சேதப்படுத்திய புகாரில் தண்டனைக்குள்ளாகி பின்னர் அணிக்குத் திரும்பிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பான்கிராஃப்ட் ஆகிய மூவரும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றனர்.
எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்தப் போட்டியின்போது வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். மணல் தன்மை உடைய சொரசொரப்பான தாளை டேவிட் வார்னர் வைத்திருப்பதாக அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அப்போது சிரித்துக்கொண்டே இருந்த டேவிட் வார்னர், தம்மிடம் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக கால்சட்டை பாக்கெட்டுகளை வெளியில் எடுத்து காண்பித்தார்.
அதைக் கண்ட இங்கிலாந்து ரசிகர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

