காற்பந்து ஆட்டக்காரர் ஹேரி மெக்வாயர் உலகத்தின் ஆக விலையுயர்ந்த ஆட்டக்காரராக நேற்று (5 ஆகஸ்ட்) மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணியைச் சேர்ந்தார்.
லெஸ்டர் சிட்டியிடமிருந்து 80 மில்லியன் பவுண்ட்ஸுக்கு (S$134.41 million) அவர் வாங்கப்பட்டார் என்று பிரிட்டிஷ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்குமுன் லிவர்பூல் அணியைச் சேர்ந்த தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜல் வேன் டைக் சென்ற ஆண்டு 75 மில்லியன் பவுண்ட்ஸுக்கு ஆக விலையுயர்ந்தவராக இருந்தார்.
26 வயது ஹேரி மெக்வாயர், "காற்பந்து ஆட்டத்தில் இருக்கும் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவர்," என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் தெரிவித்தார்.

