ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

2 mins read
2b8ee421-7d0f-4fe4-8d91-b68096bb82b2
நாதன் லயான் பந்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஆட்டம் இழந்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

இருநாடுகளுக்கு இடையில் ஆஷஸ் கிண்ண டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் திடலில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸிஸ் ஆஸ்திரேலியா 284 ஓட்டங்களிலும் இங்கிலாந்து 374 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தன. தடுமாற்றத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி முதல் இன்னிங்ஸில் சரிவி

லிருந்து மீட்டார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இதிலும் ஸ்மித் 142 ஓட்டங்களையும் மேத்யூ வேட் 110 ஓட்டங்களையும் விளாசினர்.

ஏழு விக்கெட்டுக்கு 487 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.

398 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியால் ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோரி பர்ன்ஸ் 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஜேஸன் ராய் 28, ஜோ ரூட் 28, ஜோ டென்லி 11, ஜோஸ் பட்லர் 1, பென் ஸ்டோக்ஸ் 6, பேர்ஸ்டோ 6, கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டங்களை எடுத்தனர். ஸ்டூவர்ட் பிராட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 52.3 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் 146 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் 49 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 32 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டை 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இரு இன்னிங்ஸ்களிலும் அபாரமாக ஆடி சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.