இண்டர் மிலானில் ரொமேலு லுக்காகு

மிலான்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்கள் ஆட்டக்காரர்களை விற்க, வாங்குவதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்த நிலையில், ரொமேலு லுக்காகுவை வாங்கியது இண்டர் மிலான்.

கடந்த மாதம், 54 மில்லியன் பவுண்டுக்கு லுக்காகுவை வாங்க முன்வந்தது மிலான்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் லுக்காகுவை வாங்கியபோது எவர்ட்டனுக்குக் கொடுத்த 75 மில்லியன் பவுண்டைத் குறைந்தபட்சம் திரும்பப் பெறும் நோக்கில் மிலானின் அந்த முன்வைப்பை நிராகரித்தது மேன்யூ.

இதற்கிடையே, 26 வயது பெல்ஜியம் வீரர் லுக்காகுவை வாங்குவதற்கு யுவென்டஸ், இண்டர் மிலான் குழுக்களுக்கிடையே போட்டி நிலவியது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 74 மில்லியன் பவுண்டுக்கு லுக்காகுவை வாங்க இண்டர் மிலான் நேற்று ஒப்புக் கொண்டது. இதற்காக, லுக்காகு மிலானோவிற்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிலான் குழுவின் நிர்வாகி அண்டோனியோ கோண்டே, செல்சியின் நிர்வாகியாக இருந்த போதிருந்தே லுக்காகுவை வாங்க ஆர்வம் காட்டி வந்தார்.

“குழுவை மேம்படுத்த உதவும் ஒரு முக்கியமான வீரராக அவரைக் கருதுகிறேன்,” என்று இந்த லுக்காகுவை குறிப்பிட்டு பேசினார்.

2017ல் மேன்யூவில் இணைந்த லுக்காகு 96 ஆட்டங்களில் 42 கோல்களைப் போட்டார். இதில் 25 கோல்கள் அவரின் முதல் மேன்யூ பருவத்தில் வந்தவை.

ஆனால் கடந்த பருவத்தில் மார்கஸ் ரேஷ்ஃபர்ட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில், லுக்காகு ஓரங்கட்டப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!