லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு யுவென்டசின் போர்ச்சுகல் வீரர் ஜோவா கோன்சிலோவை 60 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியுள்ளது.
ஒப்பந்தப்படி, அதற்குப் பதிலாக அக்குழுவில் உள்ள டேனிலோவை 34.1 மில்லியன் பவுண்டுக்கு யுவென்டசின் விற்றுள்ளது சிட்டி.
கடந்த ஆண்டு வெலன்சியா குழுவில் இருந்து 35 மில்லியன் பவுண்டுக்கு யுவென்டஸ் குழுவில் இணைந்தார் கேன்சிலோ.
இப்பருவத்தில் ஏஞ்சலினோ, ரோட்ரி இருவரையும் ஏற்கெனவே சிட்டி வாங்கியுள்ள நிலையில் மூன்றாவதாக கேன்சிலோவை வாங்கியுள்ளது.
அதே போல், ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் யுவென்டசில் சேர்ந்துள்ள 25 வயது டேனிலோ, 2017ல் மட்ரிட் குழுவில் இருந்து 26.5 மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்டார்.
இவர் சிட்டி குழுவிற்காக இதுவரை 22 பிரிமியர் லீக் போட்டிகள் உட்பட 60 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

