ஃபுல்ஹம் வீரரும் இங்கிலாந்தின் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான குழுவில் விளையாடுபவருமான ரயன் செசஸ்க்னானை 25 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியுள்ளது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.
இதற்குப் பதிலாக ஸ்பர்சின் மத்திய திடல் வீரர் ஜோஷ் ஒனமா ஃபுல்ஹம் குழுவிற்குச் செல்கிறார்.
கடந்தப் பருவத்தில் பிரிமியர் லீக் பட்டியலில் இருந்து ஃபுல்ஹம் வெளியேற்றப்பட்டாலும், 35 பிரிமியர் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள 19 வயது ரயன் இரண்டு கோல்களைப் போட்டுள்ளார்.
இதற்கிடையே, டோட்டன்ஹம் பெரிதும் வாங்க விரும்பிய டைபாலாவை விற்க போவதில்லை என்று யுவென்டஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2015ல் யுவென்டசில் சேர்ந்த டைபாலா கடந்தப் பருவத்தில் 10 கோல்களைப் போட்டார்.
மேலும் கொட்டீனியோவை கடனாக பெறும் முடிவில் இருந்தும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் பின்வாங்கியுள்ளது.
இதற்கிடையே, ஸ்பர்சின் மத்திய திடல் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மேன்யூவிற்குக் குழு மாறக்கூடும் என்ற பேச்சும் தடைப்பட்டதாகத் தெரிகிறது.

