பந்துவீச்சாளரின் புதிய சாதனைv

பந்துவீச்சாளரின் புதிய சாதனைv

1 mins read

லண்டன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கொலின் அக்ர்மன் இருபது ஓவர் கவுண்ட்டி போட்டிகளில் புதிய உலகச் சாதனை புரிந்துள்ளார்.

லெஸ்டர்சைர் அணிக்காக விளையாடும் 28 வயது சுழற்பந்து வீச்சாளர் கொலின் அக்ர்மன், ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, 18 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து புதிய உலகச் சாதனையை எட்டியுள்ளார்.

பிர்மிங்ஹம் அணிக்கு எதிராக அவர் எட்டிய இச்சாதனையை அடுத்து, 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லெஸ்டர்சைர் அணி வெற்றி பெற்றது.

கடந்த 2011ல் சோமர்ஷட் அணிக்காக விளையாடிய அருள் சுப்பையா எனும் மலேசிய வீரர் கிளமோர்கன் அணிக்கு எதிராக 6-5 என்று விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.