சம்பள பாக்கி; களமிறங்காமல் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம்

சம்பள பாக்கி; களமிறங்காமல் கிரிக்கெட் வீரர்கள் போராட்டம்

1 mins read

ஒட்டவா: கனடா குளோபல் 20 ஓவர் போட்டிகளில் கடந்த புதன்கிழமையன்று மோதவிருந்த யுவராஜ் சிங் அங்கம் வகிக்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியும் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணியும் களமிறங்க மறுத்தனர்.

அதாவது விடுதியிலிருந்து மைதானத்துக்குச் செல்லும் பேருந்தில் இரு அணி வீரர்களும் ஏற மறுத்ததாக கிரிக் இன்போ செய்தி தெரிவிக்கிறது. இதனால் இரு அணிகள் மோதிய ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததே இந்த திடீர் எதிர்ப்புக்குக் காரணம் என்கின்றன தகவல்கள்.