மூட்டு அறுவை சிகிச்சையால் கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா தற்காலிக விலகல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு உள்ளார்.

இதனையடுத்து அவர் மீண்டு வர குறைந்தது 6 வார கால புனரமைப்பு சிகிச்சை, பயிற்சிகள் தேவைப்படுவதால் கிரிக்கெட்டிலிருந்து குறுகிய காலத்துக்கு விலகியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத் தலைவருமான சுரேஷ் ரெய்னாவிற்கு ஆம்ஸ்டர்டாமில் அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து சீராக குணமடைந்து வருவதாக தனது டுவிட்டர், இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

கடந்த 2007ல் முதல் முறையாக மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு குணமடைந்த ரெய்னா,   மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மூட்டுவலியால்  அவதிப்பட்டு வந்த அவர், இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

இதன் காரணமாக ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். உள்நாட்டுத் தொடர்களிலும் அவர் பங்கேற்க முடியாது.

இந்திய அணிக்காக கடந்த 2018ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியதே ரெய்னாவின் கடைசி போட்டி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்களில் சிங்கப்பூரர்களே மோதியதால் தங்கமும் வெள்ளியும் சிங்கப்பூருக்கே வந்து சேர்ந்தது. படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் மேசைப் பந்துச் சங்கம்

11 Dec 2019

மேசைப் பந்தில் சிங்கப்பூர் இரண்டு தங்கம்

ஆர்சனலின் மூன்றாவது கோலை அடிக்கும் பியர் எமெரிக் ஒபமெயாங். படம்: ராய்ட்டர்ஸ்

11 Dec 2019

இபிஎல் காற்பந்து: தொடர் தோல்விக்கு ஆர்சனல் முற்றுப்புள்ளி