ஆப்கான் வீரர் ஷாசாத் ஒப்பந்தம் திடீர் ரத்து

ஆப்கான் வீரர் ஷாசாத் ஒப்பந்தம் திடீர் ரத்து

1 mins read

காபூல்: கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ் தான் அணிக்காக இரண்டு ஆட்டங்களில் விளையாடிய ஷாசாத் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ஆனால், தான் உடல்நலத்துடன் இருப்பதாகவும் கிரிக்கெட் வாரியம் தனக்கு எதிராகச் செயல்படுவதாகவும் ஷாசாத் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ் தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகமது ஷாசாத் வெளிநாடு

களில் நடைபெறும் லீக் ஆட் டங்களில் பங்கேற்பதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை.

"மேலும் இதுகுறித்த விசாரணையிலும் அவர் பங்கேற்காததால், முகமது ஷாசாதுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.