இந்தியாவுக்கு எதிராக அதிக எடை கொண்ட வீரர்

இந்தியாவுக்கு எதிராக அதிக எடை கொண்ட வீரர்

1 mins read

கேப் டவுன்: இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீசின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அதிக எடை கொண்ட வீரர் சேர்க்கப் பட்டுள்ளார்.

ரஹீம் கான்வால் என்ற பெயர் கொண்ட 6.6 அடி உயரமான அந்த வீரரின் எடை 140 கிலோ ஆகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடையுடன் விளையாடிய வீரர் என்ற வினோதமான சாதனையைப் படைப்பார்.

கார்ன்வால் 55 முதல்தர போட்டிகளில் விளையாடி 2,224 ஓட்டங்களும் 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் அதிரடியாக பந்தடிக்கும் இவர் முதல் தரப் போட்டிகளில் 13 அரை சதங்களும் ஒரு சதமும் விளாசியுள்ளார்.

அண்மையில் இந்தியா-ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்-ஏ அணிக்காக களம் இறங்கிய இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக அனைத்துலக டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.