ஸ்டாக்ஹோம்: அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஒன்றில் அட்லெட்டிகோ மட்ரிட் 2-1 என யுவென்டஸ் குழுவை வீழ்த்தியது.
நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் போடுவதைப் பார்க்க மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
அப்போது, 126 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்ட அட்லெட்டிகோவின் புதிய வீரர் ஜோவோ ஃபிலிக்ஸ் இரண்டு வெற்றி கோல்களையும் போட்டு ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.
இதற்கிடையே, யுவென்டஸ் குழுவின் ஆறுதல் கோலை 29வது நிமிடத்தில் போட்டார் சாமி
கேதிரா.
ஸ்பானிய லா லீகா பருவத்தில் தனது முதல் ஆட்டத்தில் வரும் ஞாயிறன்று கெட்அஃபே குழுவை எதிர்க்கிறது அட்லெட்டிகோ மட்ரிட்.

