'2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி நடவடிக்கை

'2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி நடவடிக்கை

1 mins read

லண்டன்: ஒலிம்பிக் போட்டிகளின் விளையாட்டு பட்டியலில் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என அனைத்துலக கிரிக்கெட் குழுத் தலைவர் மைக் கேட்டிங் கூறிஉள்ளார்.

ஐசிசி தலைமை நிர்வாகி மனு சாவ்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், 2028ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க முடியும் என்று நம்புவதாககேடிங் கூறியுள்ளார்.

"ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது குறித்து ஐசிசி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் இது உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

"இது இரண்டு வாரங்களே நடக்கவிருப்பதால் முதலில் முறை யாகத் திட்டமிட்டுவிட்டால், இதை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திட்டமிடுவது எளிமையாக இருக்கும்.

"அடுத்த 18 மாதங்களில், அதை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

"பிசிசிஐ தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறை.

"கிரிக்கெட் விளையாட்டு நீடித்து இருக்க ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட அனைத்து நாடுகளும் இணங்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

மகளிர் கிரிக்கெட் சமீபத்தில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்க வேண்டும் என்று கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.