டொரண்டோ: கனடாவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி
யான குளோபல் டி20 தொடரை வின்னிபெக் ஹாக்ஸ் அணி முதல்முறையாக வென்றுள்ளது.
கடந்த ஜூலை 25ஆம் தேதி ஆரம்பமான இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு வின்னிபெக் ஹாக்ஸ் அணியும் நடப்பு வெற்றியாளரான வான்கூவர் நைட்ஸ் அணியும் முன்னேறின.
வான்கூவர் நைட்ஸ் அணி கேட்டுக் கொண்டதற்கிணங்க முதலில் பந்தடித்து வின்னிபெக் ஹாக்ஸ், 8 விக்கெட்டு இழப்
புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து, 193 என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய வன்கூவர் நைட்ஸ் அணியும் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்
ததால், சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் வான்கூவர் நைட்ஸ் அணி 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பின்னர் பந்தடித்த வின்னிபெக் ஹாக்ஸ் அணி10 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைக் கடந்து முதல் முறையாகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

