மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட பேல்

மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட பேல்

1 mins read
fd53a0ab-e1e8-45c1-9b25-fbc36ebcabf9
-

ரோம்: நட்புமுறை ஆட்டமொன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரியால் மட்ரிட் குழுவிற்காகக் களமிறங்கிய கேரத் பேல் கோல் போட்டபோதும் அக்குழுவால் வெற்றி பெற முடிய வில்லை.

சீன குழு ஒன்றிற்கு பேல் செல்வதற்கு ரியால் மட்ரிட் முட்டுக் கட்டையாக இருந்தது.

இதனால் பேலுக்கும் ரியால் குழுவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 85 மில்லியன் பவுண்டுக்கு மட்ரிட் குழுவிற்கு வந்த பேலுக்கு இன்னும் மூன்றாண்டு ஒப்பந்தம் உள்ளது.

இந்நிலையில், அவர் மட்ரிட் குழுவிற்காக நேற்று மீண்டும் விளையாடியுள்ளார்.

முன்னதாக, மட்ரிட் நிர்வாகி ஸினடின் ஸிடான் மட்ரிட்டில் இருந்து பேல் வெளியேறும் காலம் கூடி வந்துவிட்டதாகக் கடந்த மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

ரோமா குழுவிற்கு எதிரான பருவத்திற்கு முந்திய நட்புமுறை ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இப்போட்டியில் கேரத் பேல் மாற்று ஆட்டக்காரராகப் பிற்பாதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்டார்.

வெற்றியாளரை நிர்ணயிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்அவுட் முறையில், பேல் கோல் போட்டபோதும் அக்குழுவின் மார்சிலோ கோல் போடத் தவறியதால், ரோமா 5-4 என வெற்றி பெற்றது.