பத்தாண்டுகளில் 20,000 ஓட்டங்கள் எடுத்தார் கோஹ்லி

கிரிக்கெட் வரலாற்றில், பத்தாண்டு காலத்தில் இருபதினாயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் ஆட்டக்காரர் எனும் அரிய சாதனையைப் படைத்திருக்கிறார் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது, கடைசி ஒருநாள் ஆட்டத்தின்போது இந்தப் பெருமையைத் தேடிக்கொண்டார் 30 வயதான கோஹ்லி. அப்போட்டியில் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை விளாசி, இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

2008ஆம் ஆண்டு அனைத்து

லகப் போட்டிகளில் அடியெடுத்து வைத்த கோஹ்லி இதுவரை 20,502 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில், 20,018 ஓட்டங்கள் கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்டவை.

இதற்குமுன், அனைத்துலகப் போட்டிகளில் பத்தாண்டு காலத்தில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் என்ற சாதனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் வசம் இருந்தது. அவர் 2000-2010 காலகட்டத்தில் 18,962 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

அவருக்கு அடுத்தபடியாக, தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் (16,777), இலங்கை வீரர்கள் மகேலா ஜெயவர்தனே (16,304), குமார் சங்ககாரா (15,999), இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (15,962), ராகுல் டிராவிட் (15,853) ஆகியோர் உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்