கோஹ்லி, ஷ்ரேயாஸ் அதிரடியில் தொடரை வென்றது இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்யிபென்: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி, பந்தடிப்பாளர் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இந்தியா.

முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது போட்டியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்நிலையில், நேற்று முன்

தினம் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்தது.

இந்திய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சகல் சேர்க்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷேன் தாமஸ் ஆகியோருக்குப் பதிலாக கீமோ பால், பேபியன் ஆலென் விளையாடினர்.

முதலில் பந்தடிக்க முடிவு செய்தார் வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர்.

அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54வது ஒருநாள் அரைசதத்தைக் கடந்து, 72 ஓட்டங்கள் விளாசியபோது கலீல் அகமது அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

43 ஓட்டங்களை விளாசிய எவின் லூவிஸ், சகல் பந்தில் தவானிடம் ‘கேட்ச்’ தந்து வெளியேறினார். இந்நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

25 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹெட்மயரை போல்டாக்கினார் ஷமி. அதிரடியாக ஆடிய பூரன் 30, ஹோல்டர் 14 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களை எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.

டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 35 ஓவரில் 255 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் நான்காம் நிலை வீரராக களமிறங்கிய ரிஷப் பன்ட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.2 ஓவர்களில் 163 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு ஓவருக்கு 7 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கவேண்டும் என்கிற நிலைமை இருந்தது.

அப்போது தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 41 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அட்டகாசமாக விளையாடி 65 ஓட்டங்கள் எடுத்தார். கோஹ்லி 114 ஓட்டங்கள் எடுத்தார். கோஹ்லி, ஷ்ரேயாஸ் இணை 120 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ஓட்டங்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

“எந்த நிலையில் விளையாடினாலும் பந்தடிப்பாளர்கள் பொறுப்போடு விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.

“பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்த ஷ்ரேயாஸ், என் மீதான நெருக்கடியைக் குறைத்தார்.

“அவர் தனது ஆட்டத்திறனை வலுவாக வெளிப்படுத்தினார்,” என்றார் ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கோஹ்லி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!