ஜெர்மானிய குழுவிற்கு இடமாறும் பிரேசில் காற்பந்து வீரர்

மியூனிக்: முன்னணி பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான ஃபெலிப்பே கொட்டீன்யோ (படம்), அடுத்த ஓராண்டு காலத்திற்கு ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவிற்காக விளையாடவுள்ளார்.

ஜெர்மனியின் முதல்நிலை காற்பந்து லீக்கான புண்டஸ்லீகாவின் நடப்பு வெற்றியாளரான பயர்ன் மியூனிக்குடன் அடுத்த சில நாட்களில் கொட்டீன்யோ இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஜனவரி மாதம் லிவர்பூல் குழுவில் இருந்து 142 மில்லியன் பவுண்டு விலைக்கு பார்சிலோனாவிற்கு இடமாறினார் 27 வயதான கொட்டீன்யோ. பார்சிலோனாவிற்காக 76 ஆட்டங்களில் களமிறங்கிய இவர் 21 கோல்களை அடித்துள்ளபோதும் அக்குழுவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சோபிக்கவில்லை.

இதையடுத்து, இவரை விற்க பார்சிலோனா பெரிதும் முயன்று வந்தது. பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் இருந்து நெய்மாரை திரும்ப வாங்க பார்சிலோனா முயன்று வருகிறது. அதற்காக, பிஎஸ்ஜிக்கு நூறு மில்லியன் யூரோ பணத்துடன் கொட்டீன்யோவையும் தர பார்சிலோனா முன்வந்ததாகவும் ஆயினும் பிஎஸ்ஜி அதை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பயர்ன் மியூனிக்கிற்கு இந்த ஒரு பருவத்திற்கு கொட்டீன்யோவைக் கடனாக வழங்க பார்சிலோனா இணங்கி இருக்கிறது. அத்துடன், பருவத்தின் முடிவில் கொட்டீன்யோவை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பையும் பயர்ன் பெற்றுள்ளது.

இதனிடையே, அத்லெட்டிக் பில்பாவ்-பார்சிலோனா குழுக்கள் மோதிய ஸ்பானிய லா லீகா ஆட்டத்தைப் பார்வையாளர்களில் ஒருவராக இருந்து கொட்டீன்யோ கண்டுகளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!