இங்கிலிஷ் பிரிமியர் லீக்: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த லிவர்பூல், ஆர்சனல்

சவுத்ஹேம்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லிவர்பூலின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. சவுத்ஹேம்டன் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் நேற்று முன்தினம் லிவர்பூல் வெற்றி கண்டது. தொடக்க ஆட்டத்தில் நார்விச் சிட்டியை 4-1 எனும் கோல் கணக்கில் அக்குழு வென்றிருந்தது. இதன் மூலம் இரு ஆட்டங்களில் ஆறு புள்ளிகளை லிவர்பூல் பெற்றுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சூப்பர் கிண்ணப் போட்டியில் செல்சியை பெனால்டியின் மூலம் வென்ற லிவர்பூல், சவுத்ஹேம்டன் உடனான ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களில் சற்று சோர்வாக காணப்பட்டது. இருப்பினும், தாக்குதல் ஆட்டக்காரர் சடியோ மனே, லிவர்பூலின் முதல் கோலை அபாரமாகப் போட்டார்.

இடைவேளை முடிந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் லிவர்பூலின் ஆதிக்கம் தொடர்ந்தது. பிரேசில் வீரர் ரொபேர்ட்டோ ஃபர்மினோ இரண்டாவது கோலை அடித்தார். எனினும், ஆட்டம் முடிவடையும் வேளையில் லிவர்பூல் கோல்காப்பாளர் ஏட்ரியன் செய்த தவற்றால் சவுத்ஹேம்டன் குழுவுக்கு ஒரு கோல் கிடைத்தது.

சூப்பர் கிண்ணப் போட்டியில் செல்சி உடனான ஆட்டம் கூடுதல் நேரத்தையும் கடந்து பெனால்டி வரை சென்றதால் லிவர்பூல் ஆட்டக்காரர்கள் சோர்வாகக் காணப்பட்டதாக சினேகல் வீரர் மனே கூறினார்.

“புதன்கிழமை 120 நிமிடங்களுக்கு விளையாடி இன்றும் ஆடுவது எளிதான ஒன்றல்ல,” என்ற அவர், லிவர்பூல் கோல்காப்பாளர் ஒரு கோலை விட்டது குழுவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகச் சொன்னார்.

லிவர்பூலைப்போலவே நடப்பு இபிஎல் பருவத்தில் ஆர்சனலும் இரு வெற்றிகளைப் பெற்றுள்ளது. சொந்த அரங்கில் பர்ன்லி குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் நேற்று முன்தினம் ஆர்சனல் வென்றது. அலெக்ஸாண்டர் லெக்கசெட்டும் பியர் எமெரிக் உபமயாங்கும் ஆர்சனலின் இரு கோல்களைப் போட்டனர்.

இருப்பினும், சற்றும் விட்டுக்கொடுக்காத பர்ன்லியை எதிர்த்து வெற்றியைப் பதிவுசெய்வதற்கு ஆர்சனல் பெரும் முயற்சியை எடுக்கவேண்டியிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!