செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்

லண்டன்: இப்பருவத்தில் செல்சி காற்பந்துக் குழுவின் முதல் வெற்றியைப் பறித்தது லெஸ்டர் சிட்டி.

ஏழாவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டு மகிழ்ந்த செல்சி, எப்படியும் முதல் வெற்றியைப் பதிவு  செய்து விடலாம் என்ற நம்பிக்கையோடு விளையாடியது.

இன்டிடியிடம் இருந்த பந்தைத் தட்டிப் பறித்து, மேசன் மவுண்ட் போட்ட அக்கோலைத்  தொடர்ந்து லெஸ்டர் சிட்டியால் கோல் எதுவும் போட முடியவில்லை.

பெட்ரோவின் பந்து கோல் வலையைத் தொட்டுச் சென்றது. 

லெஸ்டர் சிட்டியின் கிறிஸ்டியன் ஃபக்ஸ் உதைத்த பந்து கோல் வலையை நோக்கிச் செல்லாமல் தடுத்துவிட்டார் தற்காப்பு வீரர் கான்டே.

பிற்பாதி ஆட்டத்தில் விறுவிறுப்புடன் விளையாடிய லெஸ்டர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

எனவே சக வீரர்கள் இருவர் உதைத்த பந்தை இன்டிடி தலையால் முட்டி கோலாக்கினார்.

67வது நிமிடத்தில் விழுந்த அந்தக் கோல் செல்சிக்கு 

பேரிடியானது.

மேலும் கோல் எதுவும் விழாத நிலையில், ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.

இரு குழுக்களும் இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், செல்சி ஒரு புள்ளியும் லெஸ்டர் இரு புள்ளிகளும் பெற்றுள்ளன.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய செல்சி நிர்வாகி லாம்பர்ட், “குழு விற்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய விஷயம்.

“இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று முழுக் கவனம் செலுத்தினோம். இனிவரும் ஆட்டங்களில் இதைவிடச் சிறப்பாக விளையாடுவோம்,” என்றார்.

இப்போட்டி சமநிலையில் முடிந்ததால், இபிஎல்லின் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்த முதல் செல்சி நிர்வாகி எனும் மோசமான பதிவில் இருந்து தப்பினார் லாம்பார்ட்.

இபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிட்டியிடம் 4-0 என தோற்ற செல்சி, சூப்பர் கிண்ணப் போட்டியில் லிவர்பூலிடம் பெனால்டி முறையில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

எதேச்சை பாணி 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். படம்: வினே‌ஷ் டுவிட்டர்

21 Sep 2019

வினேஷ் போகத் தங்கம் வெல்ல முனைப்பு

மெர்செடிஸ் அணியின் ஓட்டுநருமான லுவிஸ் ஹேமில்டன். படம்: ஊடகம்

21 Sep 2019

‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு ஹேமில்டன் குறி

ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்ட பதின்மவயது வீரர் மேசன் கிரீன்வுட் (நடுவில்).
அஸ்தானாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் இவர் அனுப்பினார். இதன்மூலம் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2019

அஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்