பயிற்சி ஆட்டத்தில் அசத்தும் இந்திய அணி

ஆன்டிகுவா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. 

புஜாரா சதமும் ரோகித் சர்மா 68, விகாரி 37, ராகுல் 36 ஓட்டங்களும் எடுத்தனர். கார்ட்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நேற்று முன்தினம் நடந்த 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 297 ஓட்டங்களுடன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

இதைத்தொடர்ந்து வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை விளையாடியது.

இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 56.1 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

ஹாட்ஜ் அதிகபட்சமாக 51, அணித் தலைவர் ஹேமில்டன் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

இஷாந் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

கள். 

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்தடிப்பாளர்கள் சாதித்தனர். 2வது நாளில் பந்துவீச்சாளர்கள் முத்திரை பதித்தனர்.

116 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.