142 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்

142 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்

1 mins read

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினத்தோடு முடிவடைந்த இரண்டாவது போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பின்றி சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டியின் நான்காவது நாள் ஆஸ்திரேலியா பந்தடிக்கும்போது ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியைப் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து கீழே சரிந்தார்.

சிறிது இடைவெளிக்குப்பின் மீண்டும் பந்தடித்தார்.

ஆனால் ஐந்தாவது நாள் அவர் களம் இறங்கவில்லை.

அவர் மூளையளர்ச்சியில் இருந்து மீளவில்லை.

அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பந்தடிக்கலாம் எனப் போட்டிக்கான டாக்டரும், ஆஸ்திரேலிய அணி மருத்துவரும் பரிந்துரை செய்தனர்.

அதன்படி நேற்று ஆஸ்திரேலியா பந்தடித்தபோது மாற்று வீரரான மார்னஸ் லாபஸ்சேக்னே களம் இறங்கி அரைசதம் அடித்துப் போட்டி சமநிலையில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்தார்.

இதன்மூலம் 142 ஆண்டுக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் பந்தடித்த சாதனையை மார்னஸ் படைத்துள்ளார்.