3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ்

3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ்

1 mins read

புதுடெல்லி: இந்திய மல்யுத்த அணியின் பயிற்சி முகாமில் இருந்து அனுமதியின்றி வெளியேறிய சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. எஞ்சிய வீராங்கனைகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த பெண்கள் அணியினருக்குப் பயிற்சி முகாம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் நடந்து வருகிறது. இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 45 வீராங்கனைகளில் 25 பேர் உரிய அனுமதி பெறாமல் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பயிற்சி முகாமில் இருந்து அனுமதி இல்லாமல் வெளியேறியவர்களில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் (62 கிலோ) மற்றும் சீமா பிஸ்லா (50 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோரும் அடங்குவார்கள். இவர்கள் மூவரும் அடுத்த மாதம் நடைபெறும் உலக மல்யுத்த வெற்றியாளர்கிண்ணப் போட்டிக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மூன்று வீராங்கனைகளும் இன்றைக்குள் (புதன்கிழமை) விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.