சச்சின் வாழ்த்து

சச்சின் வாழ்த்து

1 mins read

புதுடெல்லி: ஆகஸ்ட் 19ம் தேதி, உலக புகைப்படத் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படக் கலைஞர்களை வாழ்த்தி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், "இத்தனை ஆண்டுகளில் என் வாழ்விலும் பணியிலும் மிகச்சிறப்பான தருணங்களைப் புகைப்படம் எடுத்த கலைஞர்களுக்கு என் உலக புகைப்பட நாள் வாழ்த்துகள்," எனப் பதிவிட்டு அவரது மனதுக்கு நெருக்கமான புகைப்படங்கள் எனச் சிலவற்றைத் தொகுத்து ஒரே புகைப்படமாக பதிவிட்டிருந்தார்.