உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அதற்கான புதிய விளையாட்டு உடைகளைப் பெற்றுள்ளது. அணித்தலைவர் விராத் கோஹ்லி, துணைத்தலைவர் அஜிங்கியா ரஹானே, இளம் விக்கெட்-காப்பாளர் ரிஷப் பந்த் உள்ளிட்ட 16 அணிவீரர்கள் தங்களது புதிய விளையாட்டு உடைகளை அணிந்துள்ளதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
மூன்று-ஆட்ட டி20 அனைத்துலகத் தொடரிலும் மூன்று-ஆட்ட ஒரு நாள் அனைத்துலகத் தொடரிலும் வாகை சூடிய இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்லக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன. 27 தொடர்களிலுள்ள 71 டெஸ்ட் ஆட்டத்தில் அவை மோதவுள்ளன.

