ஆர்சனலுக்கான சவால்

லிவர்பூல்: இவ்வாண்டு இங்கிலிஷ் காற்பந்து பருவத்தில் தாங்கள் விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களில் இரண்டிலுமே வெற்றி பெற்ற குழுக்கள் லிவர்பூல், ஆர்சனல் ஆகிய இரு குழுக்கள்தான்.

எனினும், நாளைய லிவர்பூல் - ஆர்சனல் ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் மைதானத்தில் இடம்பெறுவதால் இங்கு லிவர்பூலுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த மைதானத்தில் ஆர்சனல் களமிறங்கும் போதெல்லாம் தாழ்வு  மனப்பான்மையுடனேயே விளையாடி உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு அணிகளும்  மோதிய கடந்த பத்து ஆட்டங்களில் 44 கோல்கள் விழுந்துள்ளன.

இதில் ஆகக் கடைசி ஆறு ஆட்டங்களில் 30 கோல்கள் விழுந்தன. 

ஆனால், அதில் 22 கோல்கள் ஆர்சனலுக்கு எதிராக லிவர்பூல் போட்டவை.

இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால், அடி வாங்கியது போதும் இனி வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் ஆர்சனல் விளையாடினால் மட்டுமே சாத்தியம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய காற்பந்துப் பருவத்தில் உனாய் எமெரியின் ஆர்சனல் குழு வலுவாக உருவெடுக்க வேண்டுமெனில் அதற்கு இதைவிட சரியான தருணம் இருக்க முடியாது என்றும் அதை லிவர்பூலை வெற்றி கொள்வதன் மூலம் தொடங்குவதுதான் சரியான ஒன்றாக இருக்கும் என்றும் காற்பந்து விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐரோப்பிய வெற்றியாளர்களான லிவர்பூலை அவர்களின் சொந்த மைதானத்திலேயே வெற்றி கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், அண்மைய காலமாக லிவர்பூலை கிட்டத்தட்ட வெற்றியை நோக்கிச் செல்லும் ஒரு இயந்திர அணியாகவே அதன் நிர்வாகி யர்கன் கிளோப் மாற்றியுள்ளார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மெர்செடிஸ் அணியின் ஓட்டுநருமான லுவிஸ் ஹேமில்டன். படம்: ஊடகம்

21 Sep 2019

‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு ஹேமில்டன் குறி

ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்ட பதின்மவயது வீரர் மேசன் கிரீன்வுட் (நடுவில்).
அஸ்தானாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் இவர் அனுப்பினார். இதன்மூலம் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2019

அஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்

எதேச்சை பாணி 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். படம்: வினே‌ஷ் டுவிட்டர்

21 Sep 2019

வினேஷ் போகத் தங்கம் வெல்ல முனைப்பு