உலக பூப்பந்தாட்டப் போட்டி: சிங்கப்பூரின் லோ கோ இயூ போராடி வென்றார்

பாசெல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் 25வது உலகப் பூப்பந்தாட்ட வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் பூப்பந்தாட்ட வீரர் லோ கியான் இயூ தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு 18-21, 21-13, 21-11 என மூன்று செட்கள் விளையாடி இறுதியில் தாமஸ் ராக்ஸல் என்பவரை வீழ்த்தியுள்ளார். அதன் முடிவில் அவர், மண்டியிட்டு கைகளை உயர்த்து தனது வெற்றியைக் கொண்டாடினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாய் பூ போவை (தைவான்) நேற்று சந்தித்தார். 

43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து அடுத்து பீவென் ஜாங்கை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார். 

முன்னதாக, ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சி 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.