ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

கொழும்பு: டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங். டி20 அறிமுக போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 2005ல் 98 ஓட்டங்கள் குவித்தார். இதுதான் 14 ஆண்டு கால சாதனையாக இருந்தது. இந்நிலையில் டி20 உலகக் கிண்ணத் தகுதி தொடரில் கனடா அணி கெய்மன் தீவு அணியை எதிர்கொண்டது. இதில் கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங் (படம்) 48 பந்தில்  ஆறு பவுண்டரிகள், 10 சிக்சருடன் 101 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை 14 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார். 

டேவிட் வார்னர் 89 ஓட்டங்களும் கனடாவைச் சேர்ந்த ஹிரால் பட்டேல் 88 ஓட்டங்களும் குவைத்தைச் சேர்ந்த அட்னான் இட்ரீஸ் 79 ஓட்டங்களும் அடித்துள்ளனர்.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

எதேச்சை பாணி 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். படம்: வினே‌ஷ் டுவிட்டர்

21 Sep 2019

வினேஷ் போகத் தங்கம் வெல்ல முனைப்பு

மெர்செடிஸ் அணியின் ஓட்டுநருமான லுவிஸ் ஹேமில்டன். படம்: ஊடகம்

21 Sep 2019

‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு ஹேமில்டன் குறி

ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்ட பதின்மவயது வீரர் மேசன் கிரீன்வுட் (நடுவில்).
அஸ்தானாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் தம்மை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் இவர் அனுப்பினார். இதன்மூலம் யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2019

அஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்