மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட் அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணியில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் ரொனால்டோ மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மிகவும் கடினமாக அமைந்தது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில், "ரசிகர்கள் நன்மதிப்புக் குறித்துக் கேள்வி எழுப்பும்போது, அது காயத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், எனக்கு மிகப்பெரிய குடும்பம் உள்ளது. எனது மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் ஏராளமான விஷயங்களை புரிந்து கொண்டுள்ளனர். இதனால் நான் என்னுடைய வழக்கமான ஆட்டத் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒருமுறை என்னுடைய அப்பாவித்தனம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது என்னைப் பெருமைப்பட வைக்கிறது," என்றார்.

