தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி

சென்னை: இந்தியா வின் புரோ கபடி லீக் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 29-24 என்ற புள்ளிக் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.

சென்னை நேரு உள்ளரங்கில் நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-யூ மும்பா (மும்பை) அணிகள் மோதின.

சிறப்பாக  விளையாடிய மும்பை அணி சமநிலையை (15-15) எட்டியதுடன் தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து முன்னிலையும் பெற்றது. இந்த முன்னிலையை மும்பை அணி கடைசி வரை தக்கவைத்துக் கொண்டது. முடிவில் மும்பை அணி 29-24 என வென்றது. இப்பருவத்தில் இதுவரை தமிழ் தலைவாஸ் சென்னையில் வெற்றி பெறவில்லை.