லா லீகா: வெற்றியைப் பறிகொடுத்த ரியால் மட்ரிட்

லா லீகா: வெற்றியைப் பறிகொடுத்த ரியால் மட்ரிட்

1 mins read

மட்ரிட்: ஸ்பானிய லா லீகா காற்பந்துத் தொடரில் ரியால் மட்ரிட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தை கடைசி நேரத்தில் சமன் செய்தது ரியால் வேலடோலிட் குழு.

இப்பருவத்தில் மட்ரிட் குழுவின் சொந்த மண்ணில் நடந்த முதல் ஆட்டம் இது.

நீண்ட நேரமாக கோல் எதுவும் விழவில்லை. இந்நிலையில், மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய லுாக்கா ஜோவிச் உதைத்த பந்தும் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.

இந்நிலையில் கரிம் பென்சிமா 82வது நிமிடத்தில் போட்ட கோலால், வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது மட்ரிட்.

ஆனால் மட்ரிட் குழுவின் அந்நம்பிக்கையை 88வது நிமிட பதில் கோலால் சீர்குலைத்தார் வேலடோலிட் குழுவின் செர்ஜி கார்டியோலா.