கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி ஆகிய முன்னணி குழுக்களுக்கு கடும் போட்டி தந்த ஸ்பர்ஸ் அணி இம்முறை தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. தமது சொந்த அரங்கில் நேற்று நியூகாசல் யுனைடெட் குழுவுடன் பொருதிய ஆட்டத்தில் அது 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. வெற்றி கோலை ஆட்டத்தின் முதல் பாதியிலேயே புகுத்தினார் நியூகாசலின் பிரேசிலிய தாக்குதல் ஆட்டக்காரர் ஜோலிண்டன். இதுவரையில் ஆடிய மூன்று ஆட்டங்களில், நியூகாசல் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். ''சில விளையாட்டாளர்கள் ஒழுங்காக விளையாடவில்லை. போதிய கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கவில்லை, அதே சமயம் நியூகாசலின் தற்காப்பை முறியடிப்பது கடினமாக இருந்தது,'' என்றார் ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகி பொக்கெட்டினோ. இந்த தோல்வியைத் தொடர்ந்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஏழாவது இடத்தை வகிக்கிறது ஸ்பர்ஸ் குழு.
ஸ்பர்ஸ் அதிர்ச்சி தோல்வி
1 mins read
ஆட்டத்தின் வெற்றி கோலை அடித்தார் நியூகாசலின் ஆட்டக்காரர் ஜோலிண்டன் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ் -

